img img img img img img img img img

பிரித்தானியா மகாராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்கவுள்ள உலகத் தலைவர்கள்..

  


 பிரித்தானியா மகாராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்கவுள்ள உலகத் தலைவர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன. அத்துடன், மகாராணியின் இறுதி சடங்கில் பங்குபெற்ற சில அரச தலைவர்களுக்கு அழைப்பு விடுக்க மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

 
இங்கிலாந்து ராணி எலிசபெத் கடந்த 8 ஆம் திகதி மரணம் அடைந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் தற்பொழுது வைக்கப்பட்டுள்ளது.
லட்சக்கணக்கான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். ராணி எலிசபெத் இறுதிச் சடங்கு வருகிற 19 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, மறைந்த ராணியின் கணவர் இளவரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரிய செலவில் மகாராணியின் இறுதி சடங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், உலக நாடுகளின் தலைவர்கள் பலருக்கு இறுதி சடங்கில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஒரு சில நாடுகள் மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பல வெளிநாட்டு தலைவர்களை மகாராணியின் இறுதி சடங்கில் பங்கெடுக்கவுள்ள நிலையில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கே பெற்றுள்ளன. ஜப்பான் நாட்டு அரசர் நருகிட்டோ மற்றும் அரசி மசாகோ மற்றும் டச்சு நாட்டிலிருந்து ராசா வில்லெம்-அலெக்சாண்டர், ராணி மாக்சிமா, இளவரசர் பீட்ரிக்சு ஆகியோர் ராணியின் இறுதி சடங்கில் கலந்துகொள்ளவுள்ளனர்.
 
மேலும் பெல்சிய மன்னர் பிலிப், நார்வேயின் அரசர் ஐந்தாம் கரால்ட் மற்றும் மனக்கோ இளவரசர் இரண்டாம் ஆல்பர்ட் போன்றவர்கள் கலந்துகொள்கின்றனர். டென்மார்க்கின் ராணி மார்கிரேத், சுபெயினின் மன்னர் ஆறாம் ஃபிலிப் ஆகியோரும் கலந்துகொள்வதாகக் தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்கா பிரதமர் சோ பைடன் மற்றும் அவரின் மனைவி சில் பைடன் ஆகியோர்க்கு அழைப்பு விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இருவரும் ராணியில் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் பிரான்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் கலந்துகொள்கிறார். துருக்கி பிரதமர் ரெசெப் தயிப் எர்டோகன், பிரேசில் பிரதமர் ஜெய்ர் போல்சனாரோ, ஐரோப்பிய ஆணைக்குழு தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
 
மேலும் சில முக்கிய தலைவர்களான இத்தாலி பிரதமர் செர்சியோ மேட்டரெல்லா, ஜெர்மனி பிரதமர் ஃபிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியர், இசுரேல் பிரதமர் ஐசக் ஹெர்சாக் , அயர்லாந்தின் பிரதமர் மைக்கேல் மார்ட்டின் மற்றும் தென்கொரியா பிரதமர் யூன் சுக்-யோல் பங்கேற்கின்றனர்.
 
பிரிட்டிசுயை தலைமையாகக் கொண்டுள்ள நாடுகளில் கனடா பிரதமர் சசுட்டின் ட்ரூடோ, ஆசுத்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீசு, நியூசிலாந்து பிரதமர் செசிந்தா ஆர்டெர்ன் கலந்துகொள்கின்றனர். மேலும் தென் ஆப்பிரிக்கா பிரதமர் சிரில் ரமபோசா, மேற்கு வங்காளம் பிரதமர் சேக் ஹசீனா, இலங்கை சனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே மற்றும் பிஜிய பிரதமர் ஃபிராங்க் பைனிமராமா பங்கேற்கின்றனர். சீனாவின் துணை அதிபர் வாங் கிசான் ராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்கவுள்ளார்.
 
அத்துடன்,  இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் பங்கேற்கிறார் என்று அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. மேலும் இந்தியா குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
 
உக்ரைன் ரசியா போர் காரணத்தினால் ரசியாவிற்கு அழைப்பு மறுக்கப்பட்டுள்ளது. மேலும் பெலாரசு, மியான்மர் மற்றும் வடகொரியா நாடுகளுக்கு அழைப்பு விடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, மகாராணியின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்க்காக சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் இன்று பிரித்தானியா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவாகும் "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னனி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிரின் மாவீரர் வெளியீடு மூன்றாவது பாடல் இதனை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் அகணி சுரேசு. இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D.,…
தளிர் வெளியீடு மாவீரர் பாடல் 2020" மண் மீட்க சென்ரவர்களே எங்கள் மாவீரர் சொந்தங்களே
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img

சிறப்பு செய்திகள்