img img img img img img img img img

ரசினிகாந்துக்கு வில்லனாக அரவிந்த் சாமி?

  


ரசினிகாந்துக்கு வில்லனாக நடிப்பது குறித்து அரவிந்த் சாமியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, அவர் பதிலளிக்காமல் கடந்து சென்றிருக்கிறார்.

தமிழ் சினிமாவின் திறமையான நடிகர்களில் ஒருவர் அரவிந்த் சுவாமி. சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு செயம் ரவியின் தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்து பாராட்டுகளைப் பெற்றார். அவர் அடுத்ததாக ரெண்டகம் என்ற படத்தில் நடிக்கிறார். அவர் ரசினிக்கு வில்லனாக நடிக்கப் போவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. அதாவது சிபி சக்கரவர்த்தியுடன் ரசினிகாந்த் இணையும் படத்தில் அரவிந்த் சாமி எதிர்மறையான பாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டது. தற்போது இது குறித்த கேள்விக்கு பதில் சொல்லாமல் கடந்து சென்றிருக்கிறார் அரவிந்த் சாமி.

இருப்பினும், நடிகரின் மெளனமே சம்மதம் என ரசிகர்கள் கருதுகின்றனர். 31 ஆண்டுகளுக்குப் பிறகு ரசினிகாந்த் மற்றும் அரவிந்த் சுவாமியை ஒன்றாகப் பார்க்க ஆர்வமாக உள்ளனர். ரசினிகாந்த் மற்றும் அரவிந்த் சுவாமி இருவரும் 1991-ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய "தளபதி" என்ற கேங்சுடர் படத்தில் சகோதரர்களாக நடித்தனர். சிவகார்த்திகேயன் நடித்த "டான்" படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சிபி சக்கரவர்த்தி, அடுத்ததாக ரசினிகாந்தை இயக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அந்த படத்தின் வேலைகள் நடந்து வருகிறதாம். ஆரம்பக்கட்ட வேலைகள் முடிந்தவுடன் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம், ரசினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமாருடன் "ஜெயிலர்" படத்தில் நடித்து வருகிறார்.

தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவாகும் "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னனி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிரின் மாவீரர் வெளியீடு மூன்றாவது பாடல் இதனை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் அகணி சுரேசு. இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D.,…
தளிர் வெளியீடு மாவீரர் பாடல் 2020" மண் மீட்க சென்ரவர்களே எங்கள் மாவீரர் சொந்தங்களே
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img

சிறப்பு செய்திகள்