img img img img img img img img img

வைரமுத்து காவிரி கரையில் பாடிய பொன்னி நதி கவிதை...

  


சமீபத்தில் கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து திருச்சிக்குச் சென்றுள்ளார். அப்போது அவர் பெருக்கெடுத்து ஓடும் காவிரியைக் காணக் காவிரி பலத்திற்குச் சென்றுள்ளார். அந்த ரம்மியமான சூழலிலிருந்தபடி வைரமுத்து எழுதிய கவிதை இப்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

தமிழ் இலக்கிய உலகில் வைரமுத்துவின் கவிதைகளுக்கு எப்போதுமே பெரிய அளவில் வாசகர்கள் உள்ளனர். அவரது கவிதைகளில் இருக்கும் வீரியமும், வார்த்தைகளின் கோர்வையையும் வாசகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும். அதேபோல், பாடல்களிலும் வைரமுத்துவின் வைர வரிகள், பல மாயங்களை நிகழ்த்தும். இளையராசா, ஏஆர் ரக்மான், தேவா, வித்யாசாகர், பரத்வாசு என முன்னணி இசையமைப்பாளர்களோடு சேர்ந்து பல கிட் பாடல்களைக் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் திருச்சிக்குச் சென்ற வைரமுத்து, அங்குப் பெருக்கெடுத்து ஓடிய காவிரி நதியை நேரில் சென்று பார்த்துள்ளார். கர்நாடக, காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் சில நாட்களாகத் தொடர் மழை பெய்து வருவதால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த அழகைக் காணக் காவிரி பாலத்திற்குச் சென்ற வைரமுத்து, அங்குத் தலைவிரித்து ஓடும் காவிரி நதியைக் கண்டு கவிதை வடித்துள்ளார். மேலும் அந்த கவிதையைத் தனது குரலிலேயே பதிவு ...

"கரிகாலன் கால் நனைத்தது நீதான்" என அந்த கவிதை தொடங்கி "பாய்ந்தோடும் காவிரியே எங்கள் பரம்பரையின் தாய்ப்பாலே, வரலாற்றின் ரத்தமே எங்கள் வயல்களின் திரவச் சாப்பாடே பல்லாண்டு தாண்டி நீ பெருக்கெடுத்து ஓடுவதாகக் கேள்விப்பட்டு கிறுக்கெடுத்து ஓடி வந்தேன் என்று வர்ணித்துள்ளார். இந்த கவிதையில் காவிரி நதியின் சிறப்புகளை கண்முன்னே கொண்டுவந்துள்ள வைரமுத்து, காதல், வீரம், அரசியல் என அனைத்தையும் பாடியுள்ளார். மேலும், இந்தக் கவிதையில், "ராசராசனின் வாள்முனையை உழவனின் ஏர்முனையை தீட்டித் தந்தவள் நீதான், கரைதொட்டு பாய்ந்தோடும் காவேரியே உன் அழகில் பறைகொட்டி, பறைகொட்டி பாவி மனம் கூத்தாடும் உடலோடு சேர்ந்தோடும் உயிர் உதிரம் நீ தாயே கடலோடு சேராமல் கழனிகளில் சேர்வாயே மலைத் தலைய கடற்காவேரியென கடியலூர் உருத்திர கண்ணன் முதல் காவிரி தாயே காவிரி தாயே...காதலர் விளையாட பூ விரித்தாயேயென கண்ணதாசன் வரை ஈராயிரம் ஆண்டுகளாய் நுராயிரம் புலவருக்கு பாடுபொருளாகிய பால்நதியே நீ யாரோ எமக்கிட்ட பிச்சையல்ல எங்கள் உரிமை நீ அரசியலின் ஆசிர்வாதமல்ல எங்கள் அதிகாரம் உன் கால்களைத் துண்டிக்க அனுமதிக்க மாட்டோம் அணைகட்ட விடமாட்டோம்" என நிறைவு செய்துள்ளார்.

சோழ மண்டலத்திற்கு நீர் ஆதாரமாக இருக்கும் காவிரியின் சிறப்பை பறைசாற்றும் வகையில் சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்திலிருந்து "பொன்னி நதி பாடல்" வெளியாகியிருந்தது. எப்போதுமே மணிரத்னம் - ஏ.ஆர். ரக்மான் கூட்டணியில் வைரமுத்து கண்டிப்பாக இருப்பார். ஆனால், தற்போது வெளியான பொன்னி நதி பாடலை, இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார். இந்நிலையில், வைரமுத்து எழுதியுள்ள பொன்னி நதி கவிதை, இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவாகும் "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னனி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிரின் மாவீரர் வெளியீடு மூன்றாவது பாடல் இதனை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் அகணி சுரேசு. இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D.,…
தளிர் வெளியீடு மாவீரர் பாடல் 2020" மண் மீட்க சென்ரவர்களே எங்கள் மாவீரர் சொந்தங்களே
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img

சிறப்பு செய்திகள்