img img img img img img img img img

கனேடிய பிரதமர் அவர்களுக்கு கனடா வாழ் தமிழர்களின் கோரிக்கைகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படுள்ளன.

  


கனடா  ரொறன்ரோவில் கனேடிய பிரதமர் மதிப்புக்குரிய யஸ்ரின் ரூடோ அவர்களுக்கு 1000 அஞ்சல் அட்டைகள் மூலம், மூன்று கனடா வாழ் தமிழர்களின் கோரிக்கைகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படுள்ளன.

ஆகசுட்டு மாதம் 27/28 ம் திகதிகளில் இடம்பெற்ற தமிழர்விழாவில் (தெருத் திருவிழாவில்) நாடுகடந்த அரசாங்கம் சாவடி ஒன்றை அமைத்து பெரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டது இதன்போது  எமது பிரச்சார சாவடிக்கு ஆயிரக்கான தமிழ் மக்கள் வந்து பெரும் ஆதரவைத் தெருவித்ததுடன், தாமாக முன்வந்து கனேடியப் பிரதமருக்கான அஞ்சல் அட்டைகோரிக்கைகளுக்கு கையெழுத்து இட்டும், தமது முகவரிக்கான போஸ்ரல் கோட்டுகளும் இட்டனர். அனைத்தும் அஞ்சல் வழியாக அனுப்பி வைக்கப்டுள்ளன.


கோரிக்கைகள் பின்வருமாறு பெரு மதிப்புக்குரிய கனடியப் பிரதமர் அவர்கட்கு.              

1-இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை/போர்க்குற்றம்,மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றில் விசாரிக்க படவேண்டும் என்பதை ,ஐ நா பாதுகாப்பு சபைக்கும்,பொதுச்சபைக்கும் பரிந்துரை செய்ய வேண்டும்.

2-இலங்கையின் வடக்கு,கிழக்கு பகுதி தமிழர்களின்  பாரம்பரிய தாயகம்,அங்கு வாழும் தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்தானவர்கள் என்ற முறையில் தமிழ் மக்கள் மத்தியில் பொதுவாக்கெடுப்பு நடாத்த ஐ நா சபைக்கு பரிந்துரை செய்யவேண்டும்.

 3-இலங்கையின் வடக்கு,கிழக்கு பகுதி தமிழர்களின்  பாரம்பரிய தாயகம்,அங்கு வாழும் தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்தானவர்கள் என்ற முறையில் தமிழ் மக்கள் மத்தியில் பொதுவாக்கெடுப்பு நடாத்த ஐ நா சபைக்கு பரிந்துரை செய்யவேண்டும்.

மேலும் காணாமல் ஆக்கப்பட்ட அனைத்துலக நாளுக்கான துண்டுப் பிரசுரப் பிரசாரம் , லெப் கேணல் தியாகி திலீபன் அவர்கள் நினைவாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினரால் மேற்கொள்ளப்படும் கனேடிய உணவு
வங்கிக்கான துண்டுப்பிரசுரங்கள் , இளைய தலைமுறைக்கான ஆங்கிலத்துண்டுப் பிரசுரங்கள், எழச்சிப் பாடல்களுகள் கொண்ட இறுவெட்டுகள் இலவசமாக மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. தமிழீழத் தேசியக்கொடி , மற்றும், கனேடிய தேசியக்கொடி என்பன பறக்கவிடப்பட்டன. தமிழீழ தேசியக் கொடியினை தேடி ஆயிரக்கணக்கில்  நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சாவடியில் மக்கள் குவிந்தமை தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற மக்களினதும், மாவீர்களின் கனவும் வென்றெடுக்கப்படும், என்பது மீண்டும் உறுதியானது.

தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவாகும் "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னனி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிரின் மாவீரர் வெளியீடு மூன்றாவது பாடல் இதனை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் அகணி சுரேசு. இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D.,…
தளிர் வெளியீடு மாவீரர் பாடல் 2020" மண் மீட்க சென்ரவர்களே எங்கள் மாவீரர் சொந்தங்களே
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img

சிறப்பு செய்திகள்