img img img img img img img img img

கோப்ரா படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியிடு...

  


சியான் விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியிடப்பட்டுள்ளது. இம்மாதம் 31-ம்தேதி வெளியாகிறது கோப்ரா. இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள "கோப்ரா" திரைப்படம் இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும்.

இப்படம் ஆகசுட் 11-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இறுதிக் கட்ட பணிகள் நிறைவு பெறாததால் வெளியீடு 31-ம்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. லலித் குமாரின் 7 ஸ்கிரீன் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் "கோப்ரா" படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். இதில் அஸ்லான் இல்மாஸ் என்ற துருக்கிய இன்டர்போல் அதிகாரியாக அவர் நடிக்கிறார். கோப்ரா படத்தில் விக்ரம் 20-க்கும் மேற்பட்ட தோற்றங்களில் நடிக்கிறார்.

விக்ரம், இர்பான் பதான் தவிர "கேஜிஎஃப்" புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி, லால், கனிகா, பத்மப்ரியா, பாபு ஆண்டனி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் கோப்ரா படத்திற்கு சென்சார் சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. யு/ஏ சான்றிதழை தணிக்கை வாரியம் கோப்ரா படத்திற்கு அளித்துள்ளது. இன்னும் சில நாட்களில் ட்ரெய்லர் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கோப்ரா படத்தை தொடர்ந்து  மீண்டும் அஜய் ஞானமுத்து இயக்கும் படத்தில் விக்ரம் இணையவுள்ளார். அடுத்த மாதம் விக்ரம் நடித்துள்ள பொன்னியின் செல்வன் வெளியாகவுள்ள நிலையில், நேற்று படத்திலிருந்து வெளியான விக்ரம் இடம்பெறும் சோழா சோழா பாடல் வரவேற்பை பெற்று வருகிறது.

தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவாகும் "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னனி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிரின் மாவீரர் வெளியீடு மூன்றாவது பாடல் இதனை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் அகணி சுரேசு. இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D.,…
தளிர் வெளியீடு மாவீரர் பாடல் 2020" மண் மீட்க சென்ரவர்களே எங்கள் மாவீரர் சொந்தங்களே
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img

சிறப்பு செய்திகள்