img img img img img img img img img

நடிகை சம்யுக்தா ஹெக்டேவுக்கு படப்பிடிப்பில் காயம்...

  


சம்யுக்தா ஹெக்டே தமிழில் கோமாளி, பப்பி, மன்மத லீலை போன்ற படங்களில் நடித்துள்ளவர். ஜெயம் ரவியின் பள்ளி பருவ காதலியாக கோமாளி படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது அவர் கிரீம் என்ற கன்னட படத்தில் நடித்து வருகிறார். இதனை அறிமுக இயக்குனர் அபிசேக் பசந்த் இயக்கி வருகிறார்.

சோஷியல் த்ரில்லர் படமான க்ரீமின் செட்டில் ஒரு ரிஸ்க்கான சண்டைக் காட்சியை படமாக்கும் போது சம்யுக்தாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கணுக்கால் மற்றும் முழங்காலில் காயம் அடைந்த அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்யுக்தா தன்னை வற்புறுத்தி ஆபத்தான சண்டைக்காட்சிகளை தானே செய்ததாக இயக்குநர் அபிசேக் பசந்த் பகிர்ந்து கொண்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சில மணிநேரங்களுக்குப் பிறகு சம்யுக்தா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். க்ரீமின் திரைக்கதையை அக்னி ஸ்ரீதர் எழுதியுள்ளார். சுனோஜ் வேலாயுதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தை டி.கே.தேவேந்திராவின் சம்வர்தினி புரொடக்சன்சு நிறுவனம் தயாரித்துள்ளது.

தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவாகும் "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னனி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிரின் மாவீரர் வெளியீடு மூன்றாவது பாடல் இதனை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் அகணி சுரேசு. இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D.,…
தளிர் வெளியீடு மாவீரர் பாடல் 2020" மண் மீட்க சென்ரவர்களே எங்கள் மாவீரர் சொந்தங்களே
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img

சிறப்பு செய்திகள்