img img img img img img img img img

AK61 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ஸ்ரீதேவியின் பிறந்தநாளில் வெளியாகும்...

  


ஸ்ரீதேவியின் பிறந்தநாளில், அஜித் நடித்துள்ள AK61 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்,  வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடைசியாக நடிகர் அஜித் குமாரின் "வலிமை" திரைப்படம் வெளியானது. அதிக பைக் ரேஸ் காட்சிகளைக் கொண்ட இப்படம் ரசிகர்களிடம் நேர்மறை விமர்சனங்களைப் பெற்றது. போனி கபூர் தயாரித்திருந்த இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியிருந்தார்.

இதையடுத்து அஜித் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் "ஏகே61" என்ற படத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. இப்படத்திற்காக அவர் முற்றிலும் மாறுபட்ட இரண்டு கெட் அப்களில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. "ஏகே 61" படத்தில் அஜித் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடிப்பதாகக் கூறப்படுகிறது. படத்தில் நடிக்கும் அவரின் தோற்றம் ஒன்று சமீபத்தில் இணையத்தில் வெளியானது. ஆனால் படத்தின் க்ளைமாக்சுக்கு அவர் வித்தியாசமான தோற்றத்தில் நடிப்பதால், அதை வெளியில் காட்டாமல் ரகசியமாக வைத்திருக்க அஜித்தும் படக்குழுவினரும் திட்டமிட்டிருக்கிறார்களாம். இதற்கிடையே ஐரோப்பா ட்ரிப்பில் இருக்கும் அஜித், பயணத்தை முடித்துக் கொண்டு ஏகே61 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இணைவார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் குறித்து ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் பிறந்தநாளான ஆகஸ்ட் 13-ம் தேதி AK61 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட திட்டமிட்டுள்ளாராம் ஸ்ரீதேவியின் காதல் கணவரும் படத்தின் தயாரிப்பாளருமான போனி கபூர்.

தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவாகும் "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னனி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிரின் மாவீரர் வெளியீடு மூன்றாவது பாடல் இதனை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் அகணி சுரேசு. இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D.,…
தளிர் வெளியீடு மாவீரர் பாடல் 2020" மண் மீட்க சென்ரவர்களே எங்கள் மாவீரர் சொந்தங்களே
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img

சிறப்பு செய்திகள்