img img img img img img img img img

மீனாவின் கணவர் வித்யாசாகர் காலமானார்....

  


சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்  நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று இரவு 7 மணியளவில் காலமானார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அதை ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருந்தார். 48 வயதான வித்யாசாகர் முன்னதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டிருந்தார்.

பின்னர், மார்ச் 2022-ன் இறுதியில், அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டதாகத் தெரிகிறது. எனவே அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் படிப்படியாக அவரது உடல்நிலை மோசமடைந்தது. இந்நிலையில் நேற்று மாலை வித்யாசாகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவால் அதிர்ச்சியடைந்த திரையுலகினரும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்கள் இரங்கலையும், மீனாவுக்கு ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே சற்று முன்பு சென்னை, பெசண்ட் நகர் மின் மயானத்தில் வித்யாசகரின் உடல் தகனம் செய்யப்பட்டது. அவரின் இறுதிச் சடங்குகளை மீனாவும், அவரது மகள் நைனிகாவும் செய்தனர். அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பார்வையாளர்களை மனம் கலங்க செய்துள்ளன.

தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவாகும் "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னனி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிரின் மாவீரர் வெளியீடு மூன்றாவது பாடல் இதனை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் அகணி சுரேசு. இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D.,…
தளிர் வெளியீடு மாவீரர் பாடல் 2020" மண் மீட்க சென்ரவர்களே எங்கள் மாவீரர் சொந்தங்களே
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img

சிறப்பு செய்திகள்