img img img img img img img img img

விஜய்யின் வாரிசு பட செகண்ட் லுக் இன்று வெளியானது…

  


விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

நேற்று மாலை வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

விஜய் நடிக்கும் அவரது 66வது படத்திற்கு வாரிசு என்ற டைட்டில் பொருத்தமாக உள்ளதென்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இதுவரை இல்லாத தோற்றத்தில் வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இருப்பதால், ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில்,வாரிசு படத்தின் செகண்ட் லுக் போஸ்டரும் கவனம் ஈர்த்து வருகின்றது. அடுத்ததாக இன்னொரு அப்டேட்டை வாரிசு படக்குழுவினர் இன்று மாலை வெளியிட உள்ளனர். பீஸ்ட் படத்தை தொடர்ந்து தெலுங்கில் முன்னணி இயக்குனராக இருக்கும் வம்சியின் இயக்கத்தில் வாரிசு படத்தில் விஜய் நடித்து வருகிறார்.

தெலுங்கில் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, குஷ்பு, ஜெயசுதா,ஷாம், யோகிபாபு உள்ளிட்டோர் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளார்கள்.

தொடர்ந்து ஆக்சன் படங்களில் விஜய் நடித்து வரும் நிலையில், தளபதி 66 படமான வாரிசு குடும்பக்கதை மற்றும் ஃபீல் குட் மூவியாக உருவாக்கப்படுகிறது. ஐதராபாத் மற்றும் சென்னையில் படப்பிடிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தெலுங்கு சினிமாவில் மோஸ்ட் வான்ட்டடாக இருக்கும் தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

நீண்ட நாட்களுக்கு பின்னர் விஜய் படத்திற்கு நடன காட்சிகளை பிரபுதேவா வடிவமைக்கிறார்.

தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவாகும் "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னனி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிரின் மாவீரர் வெளியீடு மூன்றாவது பாடல் இதனை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் அகணி சுரேசு. இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D.,…
தளிர் வெளியீடு மாவீரர் பாடல் 2020" மண் மீட்க சென்ரவர்களே எங்கள் மாவீரர் சொந்தங்களே
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img

சிறப்பு செய்திகள்