img img img img img img img img img

விஜய் 66 படத்தின் சண்டை காட்சி சென்னையில் தொடங்கியது!

  


விஜய் நடிப்பில் உருவாகும் 66வது படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பில் சண்டை காட்சி படமாக்கப்பட்டு வருகிறது.

வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவரின் 66வது படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. முதல் கட்ட படப்பிடிப்பை சென்னையில் முடித்த படக்குழுவினர், இரண்டாம் கட்ட படப்பிடிப்பை ஹைதராபாத்தில் நடத்தினர். இதை தொடர்ந்து மீண்டும் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டது.

அதில் சில வசன காட்சிகளும் ஒரு பாடல் காட்சியையும் படக்குழுவினர் படமாக்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது சண்டை கலைஞர்களுடன் விஜய் மோதும் சண்டைக் காட்சியை சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் படமாக்கி வருகின்றனர்.  அது தவிர விஜய், குஷ்பு உள்ளிட்டோர் பங்குபெறும் சில காட்சிகளையும் அங்கு படமாக்குகின்றனர்.  சென்னை படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்த மாதம் மீண்டும் ஐதராபாத்தில் நான்காம் கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என படக்குழு தரப்பில் கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தில் நடிகர் விஜயுடன் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ் பிரபு, ஷாம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.  அதைப்போல் முதன்முறையாக இந்த திரைப்படம் மூலம் இசையமைப்பாளர் எஸ். தமன் விஜய்யுடன் கூட்டணி அமைத்துள்ளார்.  விஜய்யின் 66வது திரைப்படத்தின் தலைப்பு வரும் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அறிவிக்க உள்ளனர். அதற்கான முதல் பார்வை மற்றும் தலைப்பு அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக படக்குழுவினர் கூறுகின்றனர்.

தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவாகும் "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னனி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிரின் மாவீரர் வெளியீடு மூன்றாவது பாடல் இதனை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் அகணி சுரேசு. இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D.,…
தளிர் வெளியீடு மாவீரர் பாடல் 2020" மண் மீட்க சென்ரவர்களே எங்கள் மாவீரர் சொந்தங்களே
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img

சிறப்பு செய்திகள்