img img img img img img img img img

தற்கொலை செய்துகொண்ட பிரபல ஆடை வடிவமைப்பாளர்..

  


இந்தியாவில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பாளர் பிரத்யுசா கரிமல்லா தனது இல்லத்தில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். 36 வயதான பிரத்யுசா தெலுங்கு மற்றும் பாலிவுட் திரை உலகின் முன்னணி ஆடை வடிவமைப்பாளர் ஆவார்.

இவர் ஹைதராபத்தின் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் தனியாக வசித்து வரும் நிலையில், நேற்று அவர் நீண்ட நேரமாக வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பின் பாதுகாவலர் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

சம்பவயிடத்திற்கு சென்ற காவல்துறையினர் பிரத்யுசாவை அவரது குளியல் அறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுத்துள்ளனர். அவருக்கு அருகே கார்பன் மோனாக்சைடு வாயு அடைத்திருந்த பாட்டிலை காவல்துறை கைப்பற்றினர். இந்த ரசாயன வாயு மூலமாக தான் இவர் உயிரிழந்திருக்கக் கூடும் என காவல்துறை சந்தேகிக்கிறது.

அத்துடன் பிரத்தயுசா எழுதி வைத்துள்ள தற்கொலை கடிதத்தையும் காவல்துறை கைப்பற்றியுள்ளது. அதில், "நான் தனிமையான வாழ்க்கை வாழ்கிறேன், இந்த வாழ்க்கையை நான் விரும்பவில்லை. எனது பெற்றோருக்கு சுமையாகவும் நான் இருக்க விரும்பவில்லை. என்னை மன்னியுங்கள்" என எழுதி வைத்துள்ளார். இவர் தற்கொலை மூலமாகத் தான் உயிரிழந்துள்ளார் என உடற்கூறு ஆய்வு முடிவுகளும் தெரிவிக்கின்றன. இருப்பினும் வீட்டில் தனியாக இருந்த பிரத்யுசா உயிரிழந்துள்ளதால் இந்த மரணத்தில் வேறு ஏதும் காரணிகள் உள்ளதா என்ற கோணத்திலும் காவல்துறை விசாரித்து வருகிறது.

இவர் பாலிவுட் பிரபலங்களான மதுரி தீக்ஷித், ஜுஹி சாவ்லா, ஜாக்குலின் பென்ரான்டஸ் ஆகிய பலருக்கு ஆடை வடிவமைப்பாளராக இருந்துள்ளார். இவர் மரணம் திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு நடிகர் ராம் சரணின் மனைவி உபாசனாவும் பிரத்யுசாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவாகும் "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னனி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிரின் மாவீரர் வெளியீடு மூன்றாவது பாடல் இதனை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் அகணி சுரேசு. இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D.,…
தளிர் வெளியீடு மாவீரர் பாடல் 2020" மண் மீட்க சென்ரவர்களே எங்கள் மாவீரர் சொந்தங்களே
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img

சிறப்பு செய்திகள்