img img img img img img img img img

அருண் விஜய்யின் யானை திரைப்படத்தின் வெளியீடு தள்ளி போகிறதா?

  


அருண் விஜய் நடித்துள்ள யானை திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை மாற்றக் கோரி விநியோகஸ்தர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருக்கும் திரைப்படம் யானை. குடும்ப சென்டிமென்ட் ஆக்ஷன் வகையில் உருவாக்கியிருக்கும் இந்த திரைப்படத்தை வரும் 17ஆம் தேதி வெளியிடுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. அதற்கான வேலைகளில் தீவிரமாக நடைபெற்று வந்தன. மேலும் அருண் விஜய்,  ஹரி ஆகியோர் கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், மதுரை உள்ளிட்ட ஊர்களில் படத்தை விளம்பரப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் 400 க்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது. அதேபோல் 17-ஆம் தேதி ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள வீட்ல விசேஷம் திரைப்படமும் வெளியாகிறது.  இதற்கும் கணிசமான திரையரங்குகளை ஒதுக்க திட்டமிட்டிருக்கின்றனர்.  இதனால் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கும் யானை திரைப்படத்தை அதிக திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனமும்,  விநியோகஸ்தர்களும் விரும்புகின்றனர்.  ஆனால் 17ஆம் தேதி யானை திரைப்படம் வெளியானால் குறைவான திரையரங்குகள் கிடைக்கும் சூழல் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

அழகான இந்த காதல் அன்பாலே நிஜமாச்சு! நயன்தாராவின் காதல் டூ கல்யாண கதை..

இதன் காரணமாக யானை திரைப்படத்தை ஜூலை 1ஆம் தேதி வெளியிட விநியோகஸ்தர்களை அப்படத்தின் தயாரிப்பாளரிடம் வலியுறுத்தி வருகின்றனர்.  இதற்கான ஆலோசனை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.  மேலும் படத்தின் வெளியீடு 17ஆம் தேதியிலிருந்து ஜூலை 1-ஆம் தேதிக்கு தள்ளி செல்ல அதிக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.  யானை  திரைப்படத்தில் அருண் விஜய்யுடன் பிரியா பவானி சங்கர், அம்மு அபிராமி,  சமுத்திரகனி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து இருக்கின்றனர்.

தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவாகும் "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னனி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிரின் மாவீரர் வெளியீடு மூன்றாவது பாடல் இதனை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் அகணி சுரேசு. இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D.,…
தளிர் வெளியீடு மாவீரர் பாடல் 2020" மண் மீட்க சென்ரவர்களே எங்கள் மாவீரர் சொந்தங்களே
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img

சிறப்பு செய்திகள்