img img img img img img img img img

கமலின் நடிப்பில் உருவான படங்களிலேயே அதிக வசூலை விக்ரம் படம் பெற்று சாதனை...

  


கமலின் நடிப்பில் உருவான படங்களிலேயே அதிக வசூலை விக்ரம் படம் பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த திரைப்படம் வசூலில் புதிய ரிக்கார்டை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான கமலின் விக்ரம் நேற்று வெளியாகி பிரமாண்ட வரவேற்பை பெற்று வருகிறது. கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், சிறப்பு தோற்றத்தில் சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில் கமல் நடித்த படங்களிலேயே முதல் நாளில் மிக அதிகமான வசூலை விக்ரம் குவித்துள்ளது. தமிழ் நாட்டில் சுமார் 21 கோடி ரூபாய் அளவுக்கு விக்ரம் படம் முதல் நாளில் கலெக்சன் ஆகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த சில வாரங்களுக்கும் விக்ரம் படம் தியேட்டர்களில் ஓடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மிக அதிகமான வசூலை விக்ரம் எட்டும் எனறு எதிர்பார்க்கப்படுகிறது.

படம் வெளியாவதற்கு முன்பாக அதற்கு மிக அதிகமான பொருட் செலவில் விளம்பரங்கள் செய்யப்பட்டன. இதனால் ஒரு விதமான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்ட நிலையில், அதனை பன் மடங்கு பூர்த்தி செய்யும் விதமாக விக்ரம் வெளிவந்திருக்கிறது.

நேற்று தமிழகமெங்கும் அதிகாலை 4 மணிக்கான சிறப்பு காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இன்றும் நாளையும் சிறப்பு காட்சிகளை வழங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், வசூல் தாறுமாறாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விக்ரம் படத்தில் பட ட்விஸ்டுகள், டேட்டாக்கள், எமோஷன், சென்டிமென்ட் என அத்தனையையும், மிக நேர்த்தியாக கொடுத்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். சமீப ஆண்டுகளில் கமலை இந்த அளவுக்கு ஒரு இயக்குனரால் பயன்படுத்த முடியுமா அல்லது அவருக்கு இதுபோன்ற ஒரு மாஸ்ஸான கேரக்ட்ரை வழங்க முடியுமா என்ற ஆச்சரியத்தில் கமலின் ரசிகர்கள் உள்ளார்கள்.

தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவாகும் "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னனி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிரின் மாவீரர் வெளியீடு மூன்றாவது பாடல் இதனை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் அகணி சுரேசு. இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D.,…
தளிர் வெளியீடு மாவீரர் பாடல் 2020" மண் மீட்க சென்ரவர்களே எங்கள் மாவீரர் சொந்தங்களே
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img

சிறப்பு செய்திகள்